எதிர்காலத்தில் பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் நான் நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதி
நான் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவர்.

எனவே எதிர்காலத்தில் நாமல் ஜனாதிபதியானால் நான் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.