Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

September 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சிறை செல்ல நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சொத்துக்களின் பெறுமதியைக் குறைத்தல், சொத்துக்களை மறைத்தல் மற்றும் போலியான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளியிடும் தீர்மானத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் - உதய கம்மன்பில எச்சரிக்கை | Npp Ministers Could Face Jail Udaya Gammanpila

மாதாந்தம் இலட்சணக் கணக்கில் உழைப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் வசந்த சமரசிங்க உரிய நேரத்தில் வரிகளை செலுத்தத் தவறியுள்ளார்.   

பிரதி அமைச்சர் நளின் ஹேவகேவின் வங்கிக் கணக்கில் உள்ள 23 இலட்சம் ரூபாய் தனது மகளுக்கு கிடைத்த பரிசுத் தொகை என கூறியுள்ளார், எனினும் அவருடைய சொத்து, பொறுப்பு விபரங்களில் பரிசுத் தொகையாக கிடைத்த பணம் தொடர்பில் எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.

பரிசாக கிடைக்கப் பெற்ற தொகை 

எல்லா நேரங்களிலும் தனக்கு உதவித் தொகை கிடைப்பதாகக் கூறும் அமைச்சர் ஹந்துன்னெத்தியின் சொத்து விபரங்களிலும் பரிசாக கிடைக்கப்பெற்ற தொகை தொடர்பில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் - உதய கம்மன்பில எச்சரிக்கை | Npp Ministers Could Face Jail Udaya Gammanpila

ஆகவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் சிறை செல்ல நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

அநுரவின் ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

Next Post

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

Next Post
பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures