கடந்த பத்தாண்டுகளில் ராஜபக்ச குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளின் மொத்த மதிப்பு, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அருகில் கூட வரவில்லை என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜி. காசிலிங்கம், X சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ராஜபக்சாக்கள் “அரசியல் பழிவாங்கல்களுக்கு” ஆளானதாகவும், அவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்து வைத்திருப்பதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டதாகவும் காசிலிங்கம் கூறினார்.
குற்றச்சாட்டுகள் வெறும் “அரசியல் சூழ்ச்சி”
இதுபோன்ற பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன அல்லது பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றச்சாட்டுகள் வெறும் “அரசியல் சூழ்ச்சி” என்று அவர் மேலும் கூறினார்.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளில் கவனம்
பொதுமக்களின் கோபம் “மூலோபாய ரீதியாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது” என்று காசிலிங்கம் தெரிவித்தார்.

ராஜபக்சக்களுக்கு எதிரான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், “உண்மையானவை திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.