முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இந்திய பெருங்கடலுக்கு பலம் மிக்க ஒரு ஆயுதக்குழுவை அனுப்பி வைத்திருந்த விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், 2015 அம் ஆண்டளவில் இவ்விடயம் பாரிய சர்ச்சைக்குள்ளான ஒரு விவகாரமாக காணப்பட்டது.
அதாவது, புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை சுமந்தபடி மிதக்கும் ஆயுத களஞ்சியங்களுடன் மூன்று பாரிய ஆயுத கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் வலம் வந்தது.
இந்த ஆயுத கப்பல்கள் விவகாரம், இலங்கையில் மிகப்பெரிய சட்டச்சிக்கலையும், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல்களையும் மற்றும் இலங்கையின் அரசியலில் மிக மோசமான அதிர்வலைகளையும் உருவாக்கி இருந்தது.
இதில் புலிகளிடம் இருந்த பல்வேறு ஆயுதங்கள், குறித்த ஆய்வு கப்பல்களின் ஊடாக கடத்தப்பட்டு நடுகடலில் வைத்து அவை சமூக விரோதிகளுக்கு கைமாற்றப்பட்டதாக ஒரு முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்து.
இந்த குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் மேற்படி ஆயுத கப்பல்களின் முழுமையான பின்னணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
