Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவின் அறிவுரையை புறக்கணித்ததால் ஆட்சியை இழந்த கோட்டாபய : டயானா கமகே

August 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இரட்டைப் பொறுப்பை வகிக்க தயாராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), அவரின் ஆட்சிக்காலத்தில் அவரின் சகோதரர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அறிவுரைகளை கூட கேட்காததாலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.

 யூடியுப் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கோட்டாபய ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் தனக்கு ஒன்றும் செய்யமுடியாது தனது கைகள் கட்டுப்பட்டுள்ளது என்றார்.

போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின

அதன் பின்னர் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றதிகாரம் மீள வழங்கப்பட்டது. அதை நிறைவேற்றவும் ஒரு வருடம் கடந்தது.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச அன்று பிரதமர் பதவி வகித்தார். அரசியலில் ஞானத்தில் கைதேர்ந்தவராக இருந்தார். ஆனால் அவரின் சில நிலைப்பாடுகள் கூட நிறைவேறவில்லை. அன்றைய நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு நிறைய பேர் உபதேசம் வழங்க இருந்தனர்.

மகிந்தவின் அறிவுரையை புறக்கணித்ததால் ஆட்சியை இழந்த கோட்டாபய : டயானா கமகே | Gota Lost Power Because Ignored Mahinda S Advice

ஆனால் சரியான அறிவுரைகளை அவர் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கோட்டாபய வேலைகளை செய்ய ஆரம்பித்த போது, அதற்கு எதிராக போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. அவர் அரசை மேலாண்மை செய்ய தவறிவிட்டார். மேலாண்மை செய்வதற்கான தளத்தை யாரும் அமைத்துக் கொடுக்கவில்லை.

இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களின் பதிவியை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர். குறிப்பாக அவர்களின் அந்தஸ்தை பாதுகாப்பதற்காக சில திட்டங்களை கிடப்பில் போட்டனர்“ என தெரிவித்தார்.

Previous Post

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: கைவிரித்த அரசாங்க தரப்பு

Next Post

பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures