சின்னத்திரை , வண்ணத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய பொழுதுபோக்கு ஊடகங்களில் பிரபலமான ஆர் ஜே செந்தில் மற்றும் புதுமுக நடிகர் ஜெயசீலன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ பொலிஸ் பொலிஸ்’ (போலீஸ் போலீஸ்) எனும் இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணைய தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த இணையத் தொடரில் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ஆர் ஜே செந்தில் , ஜெயசீலன், ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷபானா ஷாஜகான், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் சுஜிதா தனுஷ், ‘பிக் பொஸ்’ புகழ் சத்யா , வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்புடன் ‘ முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும் ‘ என்ற டேக்லைனும் இணைக்கப்பட்டிருப்பதால் இந்தத் தொடரை பற்றிய எதிர்பார்ப்பு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.