சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலுலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலைக்கான “விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கவனயீர்ப்பின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (24) யாழ்ப்பாணம் – கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது.
அதன்போது, முன்னாள் அரசியற் கைதி விவேகானந்தனூர் சதிஸ் சிறைக்காலத்தில் எழுதிய“துருவேறும் கைவிலங்கு” எழுத்து ஆவணப்பேழை ஆய்வறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த நூல் தொடர்பான வெளியீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம் ஆற்றியிருந்தார்.
துருவேறும் கைவிலங்கு நூல் பற்றி பேராசிரியர் எடுத்துரைத்த விடயங்கள் பின்வரும் காணொளியில்…