நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ றெக்கை முளைத்தேன்’ படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ்- எம். சசிகுமார் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ றெக்கை முளைத்தேன் ‘ எனும் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், பிரபா, குரு தேவ், நிதிஷா, மெர்லின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீஸன்- தரண் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டோன் எலிபென்ட் கிரியேஷன்ஸ் மற்றும் பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. 18 நிமிட கால அவகாசத்திற்குள் மொத்தம் ஐந்து பாடல்களை கொண்ட இப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களை பாடலாசிரியர்கள் ஏ. பா. ராஜா – கார்த்திக் நேதா – ராயபுரம் ஸ்ரீகாந்த் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்த பாடல்களை ஆர்.கே அதியா – எம் எம் மானசி – கபில் கபிலன் – ஜூனியர் நித்யா -தீபன் – என். கே. பிரியங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் மயக்கும் மெட்டில் அமைந்திருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.