Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல்

July 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல்

காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், “Police” என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை (Palai) பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பளை – வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அழைத்துச் சென்ற புலனாய்வாளர்கள்

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ”பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல் | Investigators Attack Family Member In Palai

இந்தநிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரை புலனாய்வாளர்கள் அழைத்து சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கைது அச்சத்தில் திணறும் ராஜித: அதிரடியாக தாக்கல் செய்த மனு!

Next Post

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் | அருள் ஜெயேந்திரன்

Next Post
லீ குவான் யூ என்ற கோத்தபாய இறந்துவிட்டார் | விமல்வீரவன்ச

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் | அருள் ஜெயேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures