Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசியக்கிண்ண டி20 தொடரில் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

December 5, 2016
in News, Sports
0
ஆசியக்கிண்ண டி20 தொடரில் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசியக்கிண்ண டி20 தொடரில் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

 மகளிர் ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மகளிர் ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்றது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதன்படி மிதாலி ராஜ், மந்தானா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

மிதாலி ராஜ் சிறப்பாக ஆட, மறுமுனையில் மந்தானா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த மேகனா (9), வேத கிருஷ்ண மூர்த்தி (2), ஹர்மன் ப்ரீத் கவுர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக செயல்பட்ட மிதாலி ராஜ் அரைசதம் கடந்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ் 65 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது.

தொடக்க வீராங்கனைகள் ஆயிஷா 15 ஓட்டங்களிலும், ஜவேரியா 22 ஓட்டங்களிலும் ஆட்டமிந்தனர்.

அதன்பின் வந்த அஷ்மாவியா இக்பால் (1), நயின் அபிதி (9), ஐரம் ஜாவேத் (3) சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனார்கள்.

பாகிஸ்தான் அணியின் தலைவி பிஸ்மா மரூப் 26 பந்தில் 25 ஓட்டங்கள் குவித்தார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய நிடா டார், சானா மிர் ஆகியோர் தலா 12 ஓட்டங்கள் எடுக்க, பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த தொடர் முழுவதும் அசத்திய இந்திய அணி தொடரில் ஒரு தோல்வி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?

Next Post

164 ஓட்டங்கள் குவித்த ஸ்மித்: சொந்த மண்ணில் நியூசிலாந்தை பந்தாடிய அவுஸ்திரேலியா

Next Post
164 ஓட்டங்கள் குவித்த ஸ்மித்: சொந்த மண்ணில் நியூசிலாந்தை பந்தாடிய அவுஸ்திரேலியா

164 ஓட்டங்கள் குவித்த ஸ்மித்: சொந்த மண்ணில் நியூசிலாந்தை பந்தாடிய அவுஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures