உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
															
