Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: சாதாரணமானது இல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

December 4, 2016
in News
0
ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: சாதாரணமானது இல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: சாதாரணமானது இல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

தற்போது உள்ள காலக்கட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் வைரஸ் உலா வருவதாக அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மால்வேரால் சராசரியாக தினந்தோறும் 13,000 ஆண்ட்ராய்டு கருவிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பு யாருக்கு?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மூலம் இயங்கும் கருவிகளை மட்டுமே இந்த கூலிகன் மால்வேர் தாக்குகிறது. அதனாலேயே கூலிகன் என பெயர் பெற்றது.

அதிலும் குறிப்பாக ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் கணக்குகளின் தகவல்களையும் தாக்குகிறது.

இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் கூகுள் கணக்குகள் முடங்கும் அபாயமும் உண்டு. கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களான ஜெல்லி பீன், கிட் கேட் மற்றும் லாலி பாப் ஆகிய இயங்குதளம் மூலமாக இயங்கும் கருவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.

கூலிகனால் பாதிக்கப்பட்ட மொத்த கருவிகளில் 57 சதவீத கருவிகள் ஆசியாவில் உள்ளன, அதேநேரம் 9 சதவீத கருவிகள் ஐரோப்பாவில் உள்ளன.

தாக்குதல் குறித்து எப்படி அறியலாம்?

https://gooligan.checkpoint.com/ என்ற இணையதளத்துக்குச் சென்று உங்களது ஆண்ட்ராய்டு கருவியுடன் தொடர்புடைய கூகுள் இ-மெயில் முகவரியை அளித்து உங்களது கருவி பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?

  • உங்களது ஆண்ட்ராய்டு கருவி கூலிகன் தாக்குதலுக்கு உள்ளானதை அறிந்தால், பிளாசிங் (Flashing) எனப்படும் இயங்குதளத்தை சுத்தம் செய்யும் நடைமுறையை உடனடியாக செய்யுங்கள். அதன்பின்னர் உங்கள் கூகுள் கணக்குகளின் கடவுச் சொல்லை உடனடியாக மாற்றுங்கள். அதுவே சிறந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Google Play Store-ல் இலவசமாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமே கூலிகன் உங்கள் மொபைலைத் தாக்கும் என்று அமெரிக்க நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பில்லாத மொபைல் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்வதை தயவு செய்து தவிர்க்கும் படி கூறியுள்ளது.

நம்பகத்தன்மையான ஆண்டிவைரஸ் சாப்ட்வேர்கள் மூலமாக உங்களது ஆண்ட்ராய்டு கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Previous Post

கூகுள் மேப்பை தோற்கடிக்குமா ஆப்பிளின் இந்த திட்டம்!

Next Post

நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

Next Post
நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு

November 14, 2026
பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures