தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் தொகுதி உறுப்பினர் ஒருவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான தி.ஹிருசன் என்பவரே இவ்வாறு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்
அடிப்படை உறுப்பினர்
இந்த விடயம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் கோப்பாய் தொகுதி அமைப்பாளருக்கு நேற்று (15) கடிதம் ஒன்றை அவர் அனுப்பிவைத்துள்ளார்

தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.