நடிகர் விமல் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விமல், எம்.எஸ்.பாஸ்கர், சாயாதேவி, அருள் தாஸ், ஸ்ரீ ரஞ்சனி, ‘காதல்’ சுகுமார், கூல் சுரேஷ், வீர சமர், மனோஜ் குமார், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். சமூகத்தை அச்சுறுத்தும் விடயத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே படத்தைக் காண வேண்டும் எனும் ஆவலை தூண்டியது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே தமிழக கிராமிய பின்னணியில் காதலுக்காக நடைபெறும் ஆணவ கொலையின் பின்னணியில் இப்படத்தின் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால், ஆதிக்க சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் என இரு தரப்பு இரசிகர்களும் படத்தை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.