Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை

March 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் (University Grants Commission) தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடுமையான சித்திரவதை

அங்கு வைத்து மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், முறைபாடு செய்தவரின் மகனை ஹெல்மெட்டால் தாக்கியதாகவும், இதனால் அந்த மானவனின் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை | University Of Jaffna Student Raging Case

மேலும், தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்ட பின்னர், கூகிள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரியுள்ள தந்தை, காவல்துறையில் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

செய்திகள் – பிரதீபன்

Previous Post

சஞ்சய் தத்தின் தி பூட்னி – ட்ரெய்லர் வெளியானது

Next Post

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞன் – தாயார் விளக்கமறியலில்

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞன் - தாயார் விளக்கமறியலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures