Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அகத்தியா – திரைப்பட விமர்சனம்

February 28, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அகத்தியா – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம்  இன்டர்நேஷனல் &  வாம் இந்தியா

நடிகர்கள்: ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட் சொனன்பிளேக் மற்றும் பலர்.

இயக்கம் : பா. விஜய்.

மதிப்பீடு : 2 / 5

ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் என வெளியீட்டிற்கு முன்னர் படக்குழுவினர் ‘அகத்தியா’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற  வைத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் ரசிகர்களுக்கு திருப்தியை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அகத்தியன் ( ஜீவா) திரைப்படத் துறையில் கலை இயக்குநராக பணியாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் அறிமுகமாகும் முதல் திரைப்படத்திற்காக லட்சக்கணக்கில் செலவழித்து பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றை வடிவமைக்கிறார். அந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெறாமல் படத்தின் பணிகள் தடை ஏற்படுகிறது. இதனால் அகத்தியன் மனதளவில் சோர்வடைய, அவருடைய உதவியாளராக இருக்கும் வீணா ( ராஷி கண்ணா) இந்த அரங்கத்தை மக்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி வடிவமைக்கலாம் என சொல்கிறார்.

வீணாவின் ஐடியா நன்றாக இருக்க அகத்தியன் அதனை ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்ற.. மக்களின் ஆதரவு பெருக அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்தத் தருணத்தில் அகத்தியனுக்கு அங்கிருந்து ஒரு பழங்கால படச்சுருள் பெட்டி கிடைக்கிறது.

அதில் சித்த மருத்துவர் சித்தார்த்தன் ( அர்ஜுன் ) தோன்றி, தமிழில் சித்த மருத்துவத்தை பற்றிய அரிய குறிப்புகளை காட்சி வழியாக ஆவண படுத்தி இருக்கிறார். அவர் 1940 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரியில் அப்போதைய ஆளுநரின் தங்கைக்கு சித்த வைத்திய  சிகிச்சை அளிக்க ஒப்புக்கொள்கிறார். அத்துடன் அரிய வகையினதான புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்தையும் கண்டறிகிறார். ஆனால் பேராசை பிடித்த பிரெஞ்சு ஆளுநர் சித்த மருத்துவரான சித்தார்த்தன் மீது கோபம் கொள்கிறார்.

அதன் பிறகு சித்த மருத்துவர் சித்தார்த்தனுக்கு 1940இல் என்ன நடந்தது? என்பதனை அறிந்து கொள்வதில் அகத்தியன் ஆர்வம் காட்டுகிறார் . அத்துடன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை சித்த மருத்துவ சிகிச்சை மூலம் காப்பாற்ற இயலும் என்றும் நம்புகிறார். அவரின் முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? இதற்கு தடையாக இருந்தது எது? அதனை எப்படியாவது வெற்றி கொண்டார்? என்பதுதான் இப்படத்தின் கதை.

ஜீவா நீண்ட வருடத்திற்கு பிறகு வித்தியாசமான அகத்தியன் எனும் திரைப்பட கலை இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் அதிகம் மெனக்கடவில்லை என்பதும் புரிகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகி வேடத்தில் நடித்திருப்பதும் , அதற்காக பிரத்யேக வேடத்தில் தோன்றுவதும் சிறப்பு. அம்மா சென்டிமென்ட் தொடர்பான கட்சிகளில் இவரை விட , இவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணியின் நடிப்பும், தோற்றமும் கவனம் ஈர்க்கிறது. 

சித்த மருத்துவர் சித்தார்த்தன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வழக்கம் போல் அலட்டல் இல்லாத அழுத்தமான வேடத்தில் நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார்.

எட்வின் டூப்ளெக்ஸ் எனும் பிரெஞ்சு ஆளுநராக நடித்திருக்கும் நடிகர் எட்வர்ட் சொனன்பிளேக் வழக்கமான வில்லனாக நடித்திருக்கிறார்.

வீணா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராசி கண்ணா குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார்.

1940 மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலகட்டங்களில் மாறி பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், தரமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் உச்சகட்ட காட்சி-

லாஜிக் மீறல் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவம் தொடர்பான படைப்பு என்பதால் இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.

அதிலும் குறிப்பாக மதம் கொண்ட யானையை அடக்குவதற்கும் சித்த மருத்துவ வேர் இருக்கிறது என குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

1940 கலை திரையில் காண்பிக்கும் போது ‘குடியரசு’, ‘திராவிடன்’, போன்ற நாளிதழ்களையும், பாரதிதாசன் – இரட்டைமலை சீனிவாசன்- அம்பேத்கார் – போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் குறிப்புகளும் இடம்பெற வைத்திருப்பது தனி சிறப்பு.

இளையராஜாவின் எவர்கிரீன் கிளாஸிக் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.  ஒரிஜினலை இந்த புதுப்பிப்பு வெற்றி கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

கதையாக கேட்கும் போது இருக்கும் சுவாரசியம் காட்சிப்படுத்துதலின் போதாமையால் மனநிறைவு ஏற்படாமல் இருக்கிறது.  படத்தின் உச்சகட்ட காட்சிக்காக உழைத்தது போல்.. படம் முழுவதும் உழைத்திருந்தால்.. பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

அகத்தியா – பயமுறுத்தாத கிராஃபிக்ஸ் பேய்

Previous Post

அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக

Next Post

அர்ச்சுனாவின் வருகை எம் தலைவர்களுக்கு பாடமாகட்டும் – கிருபா பிள்ளை

Next Post
அர்ச்சுனாவின் வருகை எம் தலைவர்களுக்கு பாடமாகட்டும் – கிருபா பிள்ளை

அர்ச்சுனாவின் வருகை எம் தலைவர்களுக்கு பாடமாகட்டும் - கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures