Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்… அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

January 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததமைக்காக மகிந்த ராஜபக்ச நாட்டில் போற்றப்படவேண்டிய நபர் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பு 

எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமிய புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போலவே மகிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்...அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம் | Mahinda S Body Should Be Preserved After Death

இதேவேளை, இப்படியான ஒரு தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பறிக்கப்பட்டு, அவர் நாட்டுக்காக ஆற்றிய பணிகளைப் புறக்கணித்து குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சாதாரண குடிமகனாக அவரை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.  

Previous Post

விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ரிங் ரிங்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post

இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

Next Post
இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures