Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் பாடல் வெளியீடு

August 2, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நொடிகளே..’ எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ‘டிமான்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஜய் ஞானமுத்து, எட்டு ஆண்டுகள் கழித்து ‘டிமான்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் -விஜய் சுப்பிரமணியன்- ஆர் சி ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நொடிகளே..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் பாடலாசிரியை ஐக்கி பெர்ரி எழுத,  இசையமைப்பாளரும் , பாடகருமான சாம் சி. எஸ். மற்றும் பாடகி ஐக்கி பெர்ரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசை + மேலத்தேய தாள லயம் +  தமிழ் மற்றும்  ஆங்கில மொழி பாடல் வரிகள் என வித்தியாசமான கலவையுடன் இந்தப் பாடல் உருவாகி இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களிடையே மட்டும் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

Previous Post

‘ரகு தாத்தா’ படத்தில் புதுமைப்பெண்ணாக தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷ்

Next Post

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

June 12, 2026
சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures