Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

புதுமுக நடிகர் குங்குமராஜ் நடிக்கும் ‘ரயில்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

June 9, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
புதுமுக நடிகர் குங்குமராஜ் நடிக்கும் ‘ரயில்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

புதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடக்கன் எனும் திரைப்படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றம் பெற்று, இம்மாதம் 21 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கதாசிரியரும், வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் ‘ரயில்’ எனும் திரைப்படத்தில் குங்கும ராஜ், வைரமாலா , வினோத் கேசவன், ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஜே. ஜனனி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனம் சார்பில் பதிப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான மு.‌ வேடியப்பன் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் வட இந்திய இளைஞர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு முதலில் ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டது. இந்த தலைப்பிற்கு தணிக்கைக் குழு கடும் எதிர்ப்பு தெரிவிக்க… தற்போது படக்குழுவினர் ‘ரயில்’ என பெயரை மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதி அன்று பட மாளிகையில் வெளியாகிறது.

தமிழர்கள் மது அருந்தி தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதுடன், சமூக அமைப்பையும் சேதப்படுத்துகிறார்கள் என்றும், இவர்களுக்கு உதவுவதற்காக வட இந்தியாவிலிருந்து வருகை தரும் வட இந்தியர்களால் தமிழர்களின் குடும்ப அமைப்பில் ஏற்படும் உளவியல் ரீதியிலான சிக்கலை விவரிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால்… ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை – எடப்பாடி கே. பழனிச்சாமி 

Next Post

ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Next Post
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! 

ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures