Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை – எடப்பாடி கே. பழனிச்சாமி 

June 9, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை | எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக ஆலோசனை

 ”பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. அதிமுக மீண்டும் வலிமை பெறும்’ என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. 

”நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். 

ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது இல்லை.      

ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும் . மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.

பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் தான் அதிகம் வருகிறது. புள்ளி விவர கணக்குப்படி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் விரைவில் சீரமைக்கப்படும்.

தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 

அதிமுக – புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது.‌ வெற்றி வரும் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள்.‌ இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் அதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால்.. தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலிமை பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன்.

நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Previous Post

4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல்

Next Post

புதுமுக நடிகர் குங்குமராஜ் நடிக்கும் ‘ரயில்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post
புதுமுக நடிகர் குங்குமராஜ் நடிக்கும் ‘ரயில்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

புதுமுக நடிகர் குங்குமராஜ் நடிக்கும் 'ரயில்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures