Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி

June 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

“நாட்டை மேலும் அபிவிருத்திச் செய்ய அதிபர் தேர்தலை நடத்தி, ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) மீண்டும் அதிபராக தெரிவு செய்ய வேண்டும்”என ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe )தெரிவித்துள்ளார்.

மேலும், இல்லையெனில், அதிபர் தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு அதிபர் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணிலுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் நடவடிக்கைகளை எடுத்துவந்தார்.

presidensial election

அவர் எடுத்த கஷ்டமான தீர்மானங்கள் காரணமாகவே குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காதவகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டமும் தற்போது இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களே அதற்கு காரணமாகும்.

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை அந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்பதற்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

பொருளாதார ரீதியில் நெருக்கடி 

அந்த வேலைத்திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்பட்டால், மீண்டும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் அரச இயந்திரங்கள் முறையாக இயங்காது. அபிவிருத்தி திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படும்.

அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்தார்.

அதில் தவறு எதுவும் இல்லை. அவர் இந்த யோசனையை எதிர்க்கட்சிக்கே முன்வைத்தார். ஏனெனில் இதுதொடர்பாக நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும்.

மீண்டும் அதிபராக ரணில்

அவ்வாறு இல்லாமல் தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர் தெரிவிக்கவில்லை. ரங்கே பண்டாரவின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் பதற்றமடைய வேண்டும் என கேட்கிறோம்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கே அது தொடர்பான ஞானம் இருக்கிறது.

புதிதாக வேறு யாரும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போகும். எனவே நாட்டை அபிவிருத்தி செய்து முன்னுக்கு கொண்டுசெல்ல இரண்டு தீர்வுகளே இருக்கின்றன.

அதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, அதில் நாட்டு மக்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க

அல்லது அதிபர் தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு அதிபர் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த தீர்மானங்களை எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அல்லு அர்ஜுனுடன் மோதும் கீர்த்தி சுரேஷ்

Next Post

குஜராத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மததீவிரவாதிகளா? கமால் குணரட்ண

Next Post
எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

குஜராத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மததீவிரவாதிகளா? கமால் குணரட்ண

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures