Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்த்தேசிய இனம் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் | சிறீதரன்

May 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கதற கதற கைது செய்தனர். 

பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர்.கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து கடந்த 23மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல என்ற போர்வையில்  இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர்.

2009ற்கு பின்பு இவ்வாறு வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி ,வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது. 

அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது.

மன வேதனை தருகிறது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது அந்த நிகழ்வை பார்க்கும் போது எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும். 

கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில்  ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தை தடுத்தனர்.நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சிறிதரன், 

கேள்வி -பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி மெளனம் காக்கிறது. 

தமிழரசுக்கட்சி மெளனம் காக்கவில்லை நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம் எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடியிருக்கின்றோம் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்தாலும் முடிவு எடுக்கப்படும். 

எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரித்திருந்தார்.அதனை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளரும் முன்வைக்கட்டும் அது வரை எமது இனத்திற்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும்.

கேள்வி -ஜனாதிபதியின் வடக்கு விடயத்தில் நீங்க மாத்திரம் கலந்து கொள்ளவில்லை 

கிளிநொச்சி வைத்தியசாலையில் குறித்த கட்டிடம் ஆரம்பிக்கப்படுகின்ற போது அத்திவாரம் வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன் அந்த படத்தை வைத்து பல அரசியல் கட்சிகள் தமது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.தேர்தல் வருகின்ற போது தேர்தல் பரப்புரையாக ரணில் விக்கிரமசிங்க வைத்திருப்பதான குற்றச்சாட்டும் உண்டு. 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு தெளிவாக முன் வைக்கவில்லை விக்கினேஸ்வரனை சந்திக்கும் போதும் நையாண்டி பதிலையே முன் வைத்தார் வேலை வாய்ப்பு ஏன்றால் போதும் என்று இங்குள்ளவர்களுக்கு எனவும் தெரிவித்தார்

Previous Post

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

Next Post

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் | நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Next Post
யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்று சாதனை | சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் | நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures