தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இன்று(29) காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 91 வயதில் காலமாகியுள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதியின் மகனான இவர், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.
இந்நிலையில் கனடா சென்ற நிலையில் அங்கு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரை தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய இவர் தமிழ் மொழிப் பற்றாளராகவும் விளங்கினார்.
தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.