Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன்னர் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை

April 21, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன்னர் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை

பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம் திகதி தகுதிகாண் சுற்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் 10 நாடுகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளதுடன்  இலங்கை மகளிர் அணியும் தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

மகளிர் ரி 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

லீக் சுற்று முடிவில் இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடத்தைப் பெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் பங்பற்ற தகுதிபெறும்.

இந்த பத்து அணிகளும் தகுதிகாண் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

இலங்கை தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்தை இன்று பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது. அப்போட்டி பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நெதர்லாந்துக்கு எதிராக 2013இல் நடைபெற்ற மகளிர் ரி20 உலக்க கிண்ண தகுதிகாண் சுற்றின் அரை இறுதிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 33 ஓட்டங்களால்  இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இலங்கை தனது 2ஆவது பயிற்சிப் போட்டியில் வனாட்டுவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளது. இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளும் அபு தாபி டொலரன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்காவில் இருவகையான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் மகளிர் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை, மிகுந்த நம்பிக்கையுடன் தகுதிகாண் சுற்றை எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவுடனான ரி20 தொடரில் 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி, தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமரி அத்தபத்துவின் சாதனைமிகு ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் 1 – 1 என சமப்படுத்தியது.

இந்த இரண்டு தொடர்களிலும் இலங்கை மகளிர் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளை ஈட்டியது போல மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலும் ஜமாய்க்கும் என நம்பப்படுகிறது.

Previous Post

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்? விசாரணைகள் அவசியம் | ஐநா

Next Post

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
பாடகரான நடிகர் சந்தானம் | ட்ரெண்டாகும் டீசர்..

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026

Recent News

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures