Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள் | சாணக்கியன்

January 25, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள் | சாணக்கியன்

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிந்து தற்போது 15 வருடங்கள் முடிவடையப் போகின்றது. 15 வருடங்களுக்குப் பின்னரும் குறிப்பாக இந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களில் மாத்திரம் இராணுவ முகாம்களை பாதுகாப்பு கருதி வைத்திருக்கின்றோம் எனக் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

குருக்கள் மடம் பாடசாலைக்குரிய மைதானக் காணியானது இராணுவ கட்டுப்பாட்டினுள் இல்லை எனக் கூறினாலும் தற்போது வரை அவ் மைதான காணி இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

மொறக்கொட்டான் சேனையில் இராணுவ முகாம் அமைத்திருக்கும் பாடசாலைக்கு பதிலாக பிறிதொரு பாடசாலையினை அமைத்ததாக கூறியுள்ளீர்கள்.

புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை ஒரு ஆற்றோர பிரதேசத்தில் காணப்படுகின்றது. இதனை அக் கிராம பெற்றோர்களோ, பிள்ளைகளோ விரும்பவில்லை.

தற்காலிகமான மாற்று வழியாக அப் பாடசாலையை பயன்படுத்தினாலும் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

மொறக்கொட்டான் சேனையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை பாதுகாப்பிற்கு முக்கியம் எனக் கருதுகின்றீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை நீங்கள் பயணம் செய்யவில்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் பொலன்நறுவை – மன்னம்பிட்டி வரை ஏராளாமான காணிகள் உங்களது இராணுவ முகாம்களை அமைப்பதற்கு காணப்படுகின்றது. அவ்வாறிருக்க நீங்கள் கிராமத்தின் நடுப்பகுதியில் இருக்கும் காணியே முக்கியம் எனக் கருதுவதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

வடக்கில் பலாலி பிரதேசத்தில் கூட மக்களுடைய நிலங்களில் இராணுவத்தினர் நிலத்திற்கு உரிமையுடைய மக்கள் வேலியால் பார்க்கும் வண்ணம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். ஜனாதிபதியிடம் ஒவ்வொரு முறையும் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் “ஏன் இன்னும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை” எனக் கேள்வி எழுப்புவார். ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்து ஒரு விடயத்தைக் கூறினால்; பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கூறாத விடயங்களை புரிகின்றார். “இதில் உண்மை பேசுவது ஜனாதிபதியா? அல்லது பாதுகாப்பு அமைச்சரா?” இதுவே என் முதற் கேள்வி…

சுனாமியின் காரணமாக இராணுவ முகாம்களை பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் மைதானங்களை தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. கல்வி கற்பிப்பது என்பது ஒரு கட்டடத்தினுள் மேற்கொள்ளும் விடயமன்று. அதற்கு சிறந்த இடவசதிகள் தேவை. பாடசாலையினை பிரதான வீதியில் கட்டுவதற்கு மைதானத்தினை கொண்டு செல்ல முடியாது. பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்காக வேறு காணிகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். காயங்கேணி பகுதியில் கடற்படை செயற்பாடுகளுக்கு காணி வேண்டும் எனக் கூறி காணிகளை அபகரிக்கின்றனர். பாலையடிவேட்டையில், தாண்டியடி போன்ற இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது. ஆகவே “இந்த காணிகளை விடுவிப்பதற்கான எண்ணம் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா?” என்ற இவ்வாறான கேள்விகள் இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பப்பட்டது மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பு | 97 வீதமானவர்கள் எதிர்ப்பு

Next Post

மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்து : ஐவர் காயம்!

Next Post
மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்து : ஐவர் காயம்!

மாத்தறை - கதிர்காமம் வீதியில் விபத்து : ஐவர் காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures