Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அதன் பயனாளி இறந்தால் அந்த வீட்டின் முழு உரிமை வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மாத்திரமே | பிரசன்ன ரணதுங்க

January 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அதன் பயனாளி இறந்தால் அந்த வீட்டின் முழு உரிமை வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மாத்திரமே | பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில், வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் போது வீட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய நொத்தாரிசு கட்டணம், முத்திரைக் கட்டணம் மற்றும் பிற வரிகளுக்கு செலவிடப்படும் தொகை திறைசேரியால் ஏற்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்த வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், அந்த வீட்டில் தற்போது வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே வீடுகளின் முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காகவே இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

பல்வேறு நகர திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளில் இருந்து மாதந்தோறும் ரூ.3000 வசூலிக்கப்படுகிறது. வாடகைப் பணம் வசூலிப்பதை முற்றாக நிறுத்துவதற்கு இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுமார் 70 வீதமான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைப்பத்திரங்களை சட்டரீதியாக வழங்கி காணி மற்றும் வீடுகளின் வாரிசுகளாக்குவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நகர வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வாடகை அடிப்படையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை வசூலை இடைநிறுத்தி, அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை சட்டப்பூர்வமாக ஒப்படைத்தலாகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்ட நிலைகள் தொடர்பில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுப் பத்திரங்களை வழங்குவது தொடர்பாக, சட்டமா அதிபருடன் ஏற்கனவே கலந்துரையாடி தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு சட்டபூர்வ உறுதிப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர், குடியிருப்பாளர்களின் பிரதிநிதித்துவத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனத்தினால் இந்த வீடுகளின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவைப் பத்திரம் மேலும் தெரிவிக்கிறது.

Previous Post

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன்

Next Post

முதலை தாக்குதலுக்கு இலக்காகிய அநுராதபுரம் சிறைச்சாலை கைதி | மற்றொரு கைதியால் காப்பாற்றப்பட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures