Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி ரணிலிடம் மூன்று கோரிக்கைகளை இந்து அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைப்பு

January 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி ரணிலிடம் மூன்று கோரிக்கைகளை இந்து அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைப்பு

மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் இந்து சமய அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்வைத்துள்ளன.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரை இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா சிவ பூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் சிவ சேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்டிருந்த நிலையில், இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவபால தேசிகர், செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளித்தனர்.

குறித்த மகஜரில், உங்கள் ஆட்சிக் காலத்தில் திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் பௌத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள், வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள், பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள், இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள் உள்ளிட்ட பத்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அம்மகஜரில், தங்களது மேற்படி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை, மதமாற்றத் தடைச் சட்டம், பசுக் கொலைத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக.

இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால் இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து புத்தர்களும் விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை முருகனை வழிபடுகிறார்கள். இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் பொருட்கள்

Next Post

ஜனாதிபதியின் வவுனியா வருகையால் பயன் இல்லை : நடந்தது சம்பிரதாய நிகழ்வே | செல்வம் எம்பி

Next Post
ஜனாதிபதியின் வவுனியா வருகையால் பயன் இல்லை : நடந்தது சம்பிரதாய நிகழ்வே | செல்வம் எம்பி

ஜனாதிபதியின் வவுனியா வருகையால் பயன் இல்லை : நடந்தது சம்பிரதாய நிகழ்வே | செல்வம் எம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures