Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பற்றி எரிந்த விமானம் | 379 பயணிகளும் உயிர்பிழைத்த அதிசயம் | ஒரு சில நிமிட பயங்கரம் குறித்து பயணிகள் தகவல்

January 4, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
பற்றி எரிந்த விமானம் | 379 பயணிகளும் உயிர்பிழைத்த அதிசயம் | ஒரு சில நிமிட பயங்கரம் குறித்து பயணிகள் தகவல்

379 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஏ350ஜப்பான் எயர்லைன்ஸ் டோக்கியோவில் தரையிறங்கிய வேளை விமானமொன்றுடன் மோதியதை தொடர்ந்து முதலில் விமானம் அதிர்ந்தது.

அதனைதொடர்ந்து தீப்பிடித்த விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தவேளை வெப்பமும் புகைமண்டலமும் பயணிகளை சூழ்ந்துகொண்டன.

விமானத்திலிருந்த பயணிகள் மத்தியில் உயிர்பிழைக்கவேண்டும் என்ற எண்ணம் தீவிரமானதும் வேகமாக பரவிக்கொண்டிருந்த தீயின் மத்தியில் தங்கள் ஆசனங்களிலிருந்து ஓடத்தொடங்கினார்கள். அவர்களின் வாழ்க்கையை அடுத்த சில நிமிடங்களே தீர்மானிக்கப்போகின்றது என்பது அவர்களிற்கு தெரிந்திருந்தது.

ஜப்பான் எயர்லைன்ஸ் 516 விமானத்திலிருந்த அனைவரும் உயிர் தப்பினார்கள் என்பது வழமைக்கு மாறான கற்பனைக்கு அப்பாற்றபட்ட விடயம்.

மிகச்சரியான விதத்தில்முன்னெடுக்கப்பட்ட பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் நவீன தொழில்நுட்பமுமே இதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

எனினும் பூகம்பத்தில் சிக்கியவர்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்த மற்றைய சிறிய விமானத்திலிருந்தவர்கள் துரதிஸ்டசாலிகள் -ஐந்து பேர் கொல்லபஎ;பட்டனர் – விமானி கடும்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்காக போராடுகின்றார்.

தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் வீடியோக்களும் பயணிகளின் தகவல்களும் ஒரு சிலநிமிட பயங்கரம் குறித்து பல கதைகளை சொல்கின்றன.

மற்றைய விமானத்துடன் மோதிய பின்னர் ஏ350 ஓடுபாதையில் நின்ற பின்னர் காணப்பட்ட நிலைமையை சுவீட் அன்டன் டெய்பே என்ற 17 வயது பயணி இவ்வாறு விபரித்துள்ளார்.

கபின் முழுவதையும் ஒருசில நிமிடங்களில் புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது என அவர் தெரிவிக்கின்றார்.

விமானத்தின் பயணிகளின் பகுதியில் காணப்பட்ட புகை நரகத்தை போல வாசம் வீசியது அது நரகம் என அவர் சுவீடன் செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

நாங்கள் விழுந்து படுத்தோம் அவசர கதவு திறக்கப்பட்டதும் நாங்கள் பாய்ந்து வெளியே வந்தோம் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கு செல்கின்றோம் என தெரியாமல் விமான நிலையத்தின் புல்வெளியை நோக்கி ஒடினோம் பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது சகோதரியும் பெற்றோரும் விமானத்தின் சிதைவுகளில் இருந்து காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

விமானம் மற்றைய விமானத்துடன் மோதியவேளை விமானம் ஒரு பக்கமாக சாய்ந்ததாக உணர்ந்தேன் என 59 வயது சட்டோசி யமகே தெரிவித்துள்ளார்.

விமானம் இறங்கும்போது ஏதோ ஒன்றுடன் மோதியதை உணர்ந்தேன் ஜன்னலிற்கு வெளியே தீப்பொறியை கண்டேன்பின்னர் விமானத்தின் உட்பகுதியை புகைமண்டலம் சூழ்ந்துகொண்டது என மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

அந்த தருணங்களை பலர் பதிவு செய்துள்ளனர்.

விமானம் நின்ற பின்னரும் இயந்திரத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த சிகப்பு ஒளிர்வை சில பயணிகள் படம்பிடித்துள்ளனர்,

இன்னுமொரு வீடியோ கமராவின் லென்ஸ்களை புகைமண்டலம்மறைப்பதை காண்பித்துள்ளது.

பயணிகள் சத்தமிடுவதையும் விமானபணியாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

விமானம் தரையிறங்கியதும் தீப்பரவல் தீவிரமடைந்ததால் விமானத்திற்குள் அனைத்தும் இருள்மயமானதாக காணப்பட்டது என பெண் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்திற்குள் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்தது உண்மையை சொல்லவேண்டும்என்றால் நான் உயிர்பிழைக்க மாட்டேன் என நினைத்தேன் என அந்த பெண் பயணி ஜப்பானின் என்எச்கே ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Previous Post

வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது

Next Post

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

Next Post
வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures