Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டிரம்புடன் இணைந்து தமிழர் உரிமைகளை வெல்வோம்!- சம்பந்தன் நம்பிக்கை

November 14, 2016
in News, Politics
0

டிரம்புடன் இணைந்து தமிழர் உரிமைகளை வெல்வோம்!- சம்பந்தன் நம்பிக்கை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட்டிரம்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்காக – நீதியைப்பெறுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்துஎடுப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் புதிய ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பலரும் எதிர்பார்த்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரானஅந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சித்தோல்வியடைந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமையவுள்ள அமெரிக்காவின் புதிய ஆட்சி தொடர்பில்ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎன்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறுகூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகின் வல்லரசு நாடுகளில் முக்கிய நாடான அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில்அங்குள்ள மக்கள் ஜனநாயக ரீதியான தீர்ப்பை தமது வாக்குகளினால் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை டொனால்ட் டிரம்புடன் போட்டியிட்டஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகிச் செல்லவுள்ள ஜனாதிபதி பராக் ஒபாமாவும்ஏற்றுக்கொண்டுள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் சொல்வது என்னவெனில், இலங்கை அரசாலும் அதன்படைகளினாலும் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பிலும், போர்க்குற்றங்கள்இழைக்கப்பட்டமை தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் 2012, 2013, 2014, 2015ம் ஆண்டுகளில்பல்வேறு பிரேரணைகளை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

தற்போது அந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலைமையில்இருக்கின்றன.

எனவே, அமெரிக்காவினுடைய கொள்கைகள் தொடரும் என்பது எமது நம்பிக்கை.ஏனெனில், ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இலங்கை தொடர்பில் பல்வேறு தீர்மானங்களைஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா நிறையேற்றி இருந்தது.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானங்களை 2015ல் ஆட்சிக்கு வந்த இலங்கையின் புதியஅரசும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்தத் தீர்மானங்கள்நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்கமுடியாது.

அது தொடரும் என்பது எங்களுடைய கருத்து.

ஆனபடியால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட்டிரம்புடன் இணைந்து எங்களுடைய தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்காக – நீதியைப்பெறுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்துஎடுப்போம் என்றார்.

Tags: Featured
Previous Post

மீண்டும் ஒன்றிணையும் மைத்திரி – மஹிந்த! அதிர்ச்சியில் ரணில்

Next Post

தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன் ; துறவியின் அநாகரீகமான நடத்தை

Next Post

தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன் ; துறவியின் அநாகரீகமான நடத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures