காசாவில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன.
ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
காசா நகரத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ள அதேவேளை இஸ்ரேலிய படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசாவின் குண்டுவீச்சினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களிற்கு அருகில் கடு;ம் வீதிமோதல்கள் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர் – இஸ்ரேலிய டாங்கிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.