வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வட மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1986ஆம் ஆண்டு சென்பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்ட குயின்ரஸ், அப்பாடசாலையின் அதிபராகவும், பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராகவும் செயற்பட்டார்.
பின்னர், உதவி கல்விப் பணிப்பாளர், பிரதி கல்விப் பணிப்பாளர், தீவகம், மடு துணுக்காய், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராக செயற்பட்டார்.
பின்னர் 2013ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
அதனை தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில், தற்போது வட மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.