Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் | மைத்திரி

September 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

நாட்டு மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்துள்ளார்கள். தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் கட்டமைப்பும் மற்றும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

தேசிய சபைக்கு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்படுதல் அவசியமாகும். சிறந்த கொள்கை திட்டத்தை முன்வைத்தால் ஆதரவு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்,

2019ஆம் ஆண்டுக்கு பின் கொவிட் பெருந்தொற்று மற்றும் தவறான அரசியல் தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு கடந்த காலங்களை காட்டிலும் குறுகிய காலத்தில் தீவிரமடைந்தது.

தவறான தீர்மானங்களை திருத்திக்கொள்ளுமாறு பலமுறை ஆலோசனை வழங்கியும் அரசாங்கம் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியது.

அனைத்து தரப்பினரது ஆலோசனைக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தால் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வை பெற்றிருக்கலாம். ஆனால் பல்வேறு காரணிகளினால் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் இல்லாதொழிக்கப்பட்டது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் 15 கோரிக்கைகளை முன்வைத்தோம்.

எமது கோரிக்கைகளை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் மாதம் சர்வக்கட்சி மாநாட்டை நடத்தினார். ஒரு அரசியல் கட்சியை தவிர ஏனைனய அரசியல் கட்சிகள் அனைத்தும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டன.

சர்வக்கட்சி மாநாட்டின் தீர்மானத்திற்கமை சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குழு ஒன்றையும் நியமித்தார்.துரதிஷ்டவசமாக மார்ச் மாதம் முதல் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் தடைப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுவினர் இருமுறை சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும்,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உண்மை தன்மையுடனும்,பொறுப்புடனும் செயற்பட்டார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாடுகள் பாராளுமன்றத்தை மையப்படுத்தி சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன்,தேர்தலுக்கு சென்றுள்ளன.

இந்த வழிமுறையை பின்பற்றவே முயற்சித்தோம்.சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் 3முறை பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டோம்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை 20ஆக வரையறுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம் இருப்பினும் தற்போது அமைச்சரவை அமைச்சுக்களினதும்,இராஜாங்க அமைச்சுக்களினதும் எண்ணிக்கை வரையறையற்ற வகையில் விஸ்தரிக்கப்படுகின்றது .

ஊழல் மோசடி,வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள போதும் அதனை பொருட்படுத்தாமல் செயற்படுவது முறையற்றதாகும்.

வெளிநாட்டு கொள்கை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய அரசியல் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்.அடிப்படையில் மாற்றம் ஏற்படுத்தாமல் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய சபையின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் சட்டமாக்கப்பட வேண்டும்.சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.நாட்டு மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்துள்ளார்கள்.தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடு காணப்பட்டால் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

Previous Post

ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனையைப் போன்று தேசிய பேரவை ஸ்தாபிக்கப்பட வேண்டும் | இம்தியாஸ் பாகீர் மாக்கார்

Next Post

பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் | பந்துல

Next Post
அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே அவசியம்

பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் | பந்துல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures