Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாய்க்கொழுப்பா? பணக்கொழுப்பா? | ஜெயக்குமார் – சீமான் இடையே கருத்து மோதல்

August 4, 2022
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
வாய்க்கொழுப்பா? பணக்கொழுப்பா? | ஜெயக்குமார் – சீமான் இடையே கருத்து மோதல்

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்களை நம்புவதால் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் என்னை எப்போது நம்புகிறார்களோ அப்போது வெற்றி கிடைக்கட்டும்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் சீமான் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். தி.மு.க. அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துவருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு ஊரெங்கும் சிலை வைத்து அரசின் கஜானாவை காலி செய்து வருகிறார். அதுகுறித்து அவர் விமர்சனம் செய்யட்டும். கடலில் பேனா வைத்தால் மீனவர்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். கடல் நடுவே பேனா வைக்கவேண்டிய அவசியம் என்ன? ஒருவருடைய வாழ்வாதாரத்தை அழித்துத்தான் இதனை அமைக்க வேண்டுமா? இதையெல்லாம் சீமான் ஏன் சொல்லவில்லை?

அதற்கு பதிலாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எம்.ஜி.ஆருக்கு நினைவுச்சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். அண்ணாவின் நினைவு சின்னம் மூக்குப்பொடி டப்பாவாம். ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ‘மேக்கப் செட்’டாம்.

சீமானுக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு இருக்கிறது பாருங்கள். இந்த வாய்க்கொழுப்பை தயவு செய்து தி.மு.க.விடம் காட்டுங்கள். அ.தி.மு.க.விடம் காட்ட வேண்டாம். காட்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்.

உங்களுக்கு பிற்காலத்தில் உங்கள் கட்சியினர் சிலை வைக்கவேண்டும் என்றால் நீங்கள் இலங்கைக்கு சென்று ஆமைக்கறியை சாப்பிட்டீர்களே… அதன்படி ஆமையைத்தான் வைப்பார்களா?. எனவே தயவு செய்து அ.தி.மு.க.வுடன் விளையாட வேண்டாம். எங்களுடைய தலைவர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துகளுக்கு, சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனக்கு வாய்க்கொழுப்பு. ஜெயக்குமாருக்கு பணக்கொழுப்பு. எது இப்போது தேவைப்படுகிறது?. ஜெயக்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்னிடம் மோத வேண்டாம். என்னை எதிர்த்து பேசும் அவர், பா.ஜ.க.வை எதிர்த்து பேசமுடியுமா?. மறுநாளே ‘ரெய்டு’ வந்துவிடும்.

உயிரை தவிர இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. எங்களை போல, அ.தி.மு.க. தேர்தலில் தனித்து நிற்கமுடியுமா? ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஜெயித்துகாட்டுவேன் என்று உறுதிதர முடியுமா? தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் எந்த கட்சிக்கும் அந்த திராணி இல்லை.

மக்களை நம்புவதால் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் என்னை எப்போது நம்புகிறார்களோ அப்போது வெற்றி கிடைக்கட்டும். அவர்கள் மக்களை நம்பாததால் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். பார்ப்போம், எத்தனை காலம் இந்த ஆட்டம் என்று?

இவ்வாறு சீமான் கூறினார்.

Previous Post

யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்! பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!

Next Post

‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..

Next Post
‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..

'ராக்கெட்ரி' படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures