Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்!

June 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் இலங்கைக்கு புதிய சிக்கல்

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும்.

இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை அரசு எதிர்கொள்கின்றது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊடக வலையமைப்பான WION சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்

கடன் உதவி தொடர்பில் அரசு தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகின்றது.

அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரும் அதேவேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது.

இலங்கையின் கடன் நிலையான மட்டத்தில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது. எனவே, பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழியப்பட்டவாறு அரசு 2020இல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையால் சுட்டிக்காட்டியபடி, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கின்றது.

எனவே, உலக வல்லரசுகளின் ஆதரவு எமக்கு தேவை. ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இலங்கையைப் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.

தனது இடைக்கால வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

கடனை மீளச் செலுத்துவதற்கும், அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும், நலிவடைந்த மக்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்குவதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக வரி முறையை சீர்திருத்துவதற்கும் கூடுதல் நிதியை வழங்க வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும். என்று குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும் என்பதால் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகின்றேன்.

பொருளாதார மறுசீரமைப்புடன் நாட்டை உறுதிப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தம் போன்ற சில அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றேன். நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் நாடுகின்றேன் என்றார்.

வெளிக் காரணிகள் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகின்றது. ஆனால், இந்தியா பல முனைகளில் அரசுக்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றது.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்

இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. இந்திய அரச அதிகாரிகள் பலருடன் நான் பேச்சு நடத்தி வருகின்றேன்.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் காலத்தின் தேவையாகும்.

கூடிய விரைவில் நாட்டை உறுதியான நிலைக்குக் கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன். எனவே, அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் எனக்கு ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை

Next Post
ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures