Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதியுதவி குறித்த ஜனாதிபதியின் கவலைக்கு சீனா அளித்துள்ள பதில் என்ன?

June 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிதியுதவி குறித்த ஜனாதிபதியின் கவலைக்கு சீனா அளித்துள்ள பதில் என்ன?

பொருளாதாரநெருக்கடிகளில் இருந்துவிடுபடுவதற்கும் கடன் சுமைகளில் இருந்து மீள்வதற்கும்  இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ள போதிலும் சீனா இன்னமும் உதவவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையால் சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனுதவியை பெற முடியவில்லை,அத்தியாவசிய பொருட்களை  கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குமாறு  இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கும் சீனா பதிலளிக்கவில்லை என பேட்டியொன்றில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடுகள் குறித்து முன்னர் போன்று சீனா கவனம் செலுத்துவதில்லை என தெரிவித்திருந்த இலங்கை ஜனாதிபதி சீனா தனது மூலோபாய கவனத்தை தென்கிழக்கு ஆசியா ஆபிரிக்கா நோக்கி திரும்புகின்றது போல தோன்றுகின்றது எனவும் குறிப்பிட்டிருநதார்.

இலங்கைக்கு உதவ தயார் என சீனா தெரிவித்துள்ளது என குறிப்பிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ச முன்னைய கடன்களை செலுத்துவதற்காக சீனா கடன்வழங்குவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதியின் இந்த கருத்து  குறித்து பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் சீனா தனது பாராம்பரிய நட்பு மற்றும் அயல்நாடான எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அனுதாபத்துடன் அவதானித்து வருகின்றது,என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு சீனா தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் பெறுமதியான அவசரமனிதாபிமான உதவிகளை சீனா வழங்கும்,முதல் தொகுதி மருந்துகள் ஏற்கனவே இலங்கை சென்றடைந்துவிட்டன, முதல் தொகுதி அரிசியுடன் கப்பல் ஏற்கனவே புறப்பட்டுவிட்டது,என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அனைத்து தரப்பும் மக்களிற்கும் உதவுவதற்காக பல தொகுதிகள் மற்றும் பல தரப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது என அறிவித்ததும் சீனா தொடர்புடைய பிணைமுறிகள் கடன்களை ஒழுங்காக கையாள்வதற்குகான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் மேற்கொண்டது என வெளிவிவகார பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கு சீனா தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயாராகவுள்ளது, இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும்,அதன் கடன்கைளை குறைப்பதற்கும்,பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் உதவுவதற்கு சீனா பங்களிப்பை வழங்கும் எனவும் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களினதும்,நிதி சகாக்களினதும் நலன்களை பாதுகாப்பதற்கான நியாபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,தனது உள்நாட்டு முதலீடு  நிதி சூழலின் ஸ்திரதன்மையையும் கௌரவத்தையும் தொடர்ந்து பேணும் எனவும் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தென்னாசிய நாடுகள் உட்பட சீனாவின் அயல்நாடுகள் சீனாவின் இராஜதந்திரத்தில் முன்னுரிமை பெற்றுள்ளன,எனவும் சீனா வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பஷில் விலகத் தீர்மானம் ?

Next Post

இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் யாழ் மங்கை கிருஷாந்தினி

Next Post
இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் யாழ் மங்கை கிருஷாந்தினி

இலங்கை பெண்கள் ஹொக்கி அணியில் யாழ் மங்கை கிருஷாந்தினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures