Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் | ஜீவன்

January 4, 2022
in News, Sri Lanka News
0
செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்-ஜீவன்

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத்துறைக்கு இம்முறை மலையகத்தில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் 04.01.2022 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பமொன்றுக்கு ஒரு கிலோ 80 ரூபாபடி 15 கிலோ கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடியும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரணத்தை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு உரிய வகையில் பங்கீடு இடம்பெறும். அதற்காக ஊழியர்களை நியமிக்கவுள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் தேவைப்படுகின்றது. அதேபோல இடம்பெற்றுள்ள சிற்சில தவறுகளுக்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் கூட்டு பொறுப்பை ஏற்கவேண்டும். அதனைவிடுத்து தனிநபர்மீது பழியை சுமத்த முற்படுவது தவறு. மக்களுக்கு சேவை செய்யவே பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு அதனை வழங்குவதற்கே முற்பட வேண்டும். மாறாக குறைகூறுவதற்காக மட்டும் மக்கள் எம்மை நாடாளுமன்றம் அனுப்பவில்லை.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம். அதுவரை பொறுமையாக இருப்போம். கூட்டு ஒப்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தொழிலாளர்களின் வலி புரியாதவர்களே அரசியல் நோக்கி கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுவர்கள் அரச ஊழியர்கள் சில நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அல்ல. தனியார் நிறுவனங்களின்கீழ்தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, கம்பனிகள்தான் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனங்கள் அதனை வழங்குமா என தெரியாது.

அதேவேளை, வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கடந்தாண்டு கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறைகள் தொடர்பில் இவ்வருடம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

4 ஆயிரம் இந்திய வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை செயற்படுத்துவோம்.

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதே மறைந்த எமது தலைவரின் நிலைப்பாடாக உள்ளது. அந்தவகையில் தமிழ் பேசும் கட்சிகளின் முயற்சிக்கு ஆதரவு வழங்கப்படும். கூட்டத்தில் பங்கேற்றால்தான் ஆதரவு என்றில்லை. ” – என்றார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

15 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இலங்கை மெய்வல்லுநர் அணி பங்கேற்கும் | பாலித்த பெர்னாண்டோ

Next Post
15 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இலங்கை மெய்வல்லுநர் அணி பங்கேற்கும் | பாலித்த பெர்னாண்டோ

15 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இலங்கை மெய்வல்லுநர் அணி பங்கேற்கும் | பாலித்த பெர்னாண்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures