Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதியவகை கொரோனா வைரசுடன் ஒருவர் அடையாளம்

May 9, 2021
in News, Politics, World
0

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , இந்தியாவில் பரவும் பி.1.617 (B.1.617) வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபரொருவரின் மாதிரியில் இந்த வைரஸ் இனங்காணப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் பிரித்தானியா, டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா மற்றும் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள 5 வகையான வெவ்வேறு வைரஸ்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

பி.1.1.7 , பி.1.428 , பி.1.525 , பி.1.617 மற்றும் பி.1.351 ஆகிய வைரஸ்களே இவ்வாறு இனங்காணப்பட்டவையாகும். இது தவிர உள்நாட்டில் பி.1.411 என்ற வைரசும் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள வைரஸ்கள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

பி.1.1.7. வைரஸ்-
பி.1.1.7. என்ற வைரஸானது பிரித்தானியாவில் பரவிய வைரஸாகும். இவ்வைரஸானது இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் , கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள் , ஹோமாகம, பொலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொழும்பில் மாத்திரமின்றி குருணாகல் மாவட்டத்தில் பொல்பிட்டிகம, குளியாப்பிட்டி, நிக்கவரெட்டிய, கனேவத்த, அம்பலன்பொல, கிரிஉல்ல, பன்னல, வாரியபொல ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிப்பட்டுள்ளது.

இதே போன்று களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த , பிம்புர, பாணந்துரை, பலிந்தருவ, பண்டாரகம ஆகிய பகுதிகளிலும் , கண்டி மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர, கண்டி மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பகுதிகளிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் மெதகிரிய பகுதியிலும் , மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பகுதியிலும் இந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.428 வைரஸ்-
இதே வேளை டென்மார்க், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இனங்காணப்பட்ட பி.1.428 என்ற வைரஸானது யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நல்லூரில் உருவாகிய கொத்தணிகளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளில் கண்டு பிடிக்கப்பட்டது.

பி.1.525 வைரஸ்-
நைஜீரியாவில் பரவிய பி.1.525 வைரஸானது பண்டாரகம மற்றும் கொழும்பில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பி.1.617 வைரஸ்-
பி.1.617 வைரஸானது இந்தியாவில் பரவும் வைரஸாகும். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் நேற்று இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.351 வைரஸ்-
தென் ஆபிரிகாவில் பரவிய பி.1.351 வைரஸானது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.411 வைரஸ்-
பி.1.411 என்ற வைரஸ் இலங்கையில் இனங்காணப்பட்டதாகும். இவ்வைரஸ் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்டுள்ளது.

Previous Post

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர் மூச்சித் திணறி உயிரிழப்பு

Next Post

மட்டக்களப்பில் பொலிசாரினால் கொரோனா தொற்று விழிப்புணர்வு

Next Post

மட்டக்களப்பில் பொலிசாரினால் கொரோனா தொற்று விழிப்புணர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures