புகையிரத வண்டியில் மோதிய பசு ஒன்று உயிரிழந்த சம்பவம் (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத வண்டியுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய பகுதியில் வைத்து பசு ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பசுவின் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில் பிரதேச மக்கள் வாழைச்சேனை பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பசு புகையிரத வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

