வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சடலங்கள் தலையில் பெரும் வெட்டுக்காயங்களுடன் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்க வளவு பகுதியில் மீட்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற வவுனியா நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

