தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
எட்டாவது தடவையாக நடைபெறும் இந்தமாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். சார்க் நாடுகளின் செயலாளர் நாயகமும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.