மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 07 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டு, அதன் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் மறுநாள் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது.