Tuesday, March 21, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

April 23, 2016
in Entertainment, News
0
Easy24News
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு மிகவும் விமர்சையாக மண்டபம் நிறைந்த பக்தர்களுடன் கொடியிறக்கம் விழா இனிதே நடந்தேறியது. புலம்பெயர் தேசத்தில் ஆலயங்களின் வருகைக்கு உழைத்தவர்களில் ஆகம கிரியா விபூதர் சிவஸ்ரீ ஆறுமுக குருக்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பதில் அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் அம்மன் பக்தர்களும் பெருமிதம் கொள்கின்றோம்.

aiyaa 13029698_10208246409149890_5076379371622028030_o

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் பிரதம குருக்களாகவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிவாச்சாரிய பணியினை மிகவும் சிறப்பாக ஆற்றிவருவதனை நாங்கள் நன்கறிவோம். பெரியோரை மதித்து மூத்த தலைமுறைக்குக் கௌரவம் கொடுத்துப் பேணி வந்த எம்மினம் இன்று திட்டமிட்டுத் தன்னுடைய கலாச்சார ஓடுபாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கப்படுகின்றது. இதற்கு எதிர் நீச்சல் போடும் வல்லமையினை ஆலயங்களே உருவாக்க வேண்டும். குறிப்பாக ஆலயத்தின் பிரதம குருக்களாக பணியாற்றும் சிவாச்சாரியார்களும் அந்தண பெரியோர்களும் முக்கியம் பெறுகின்றனர். சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் ஐயா அவர்கள் கிரியைக் கர்மங்களை முற்றுமுணர்ந்து மந்திரம், கிரியை, பாவனை மூன்றும் ஒன்றுசேரத் தரிசிப்போரை பரவசமடையச் செய்பவர். கோவில் கிரியைகளோடு மட்டும் அல்லாது சைவஸ்மார்த்தக் கிரியைகளையும் செய்து வைப்பதில் ஈடிணையற்றவர். டொரோண்டோ பெரும்பாகத்தில் உள்ள மக்கள் இவர் கிரியை செய்து வைப்பதைப் பெறுதற்கரிய பேறாகக் கருதுகின்றனர். குருக்கள் அவர்களால் செய்து வைக்கப்பட்ட கும்பாபிஷேகங்கள், உற்சவங்கள் பல. கிரியையை நிகழ்த்தும் போது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒன்று சேர்த்து நேரத்தையும், உணவையும் கூட பொருட்படுத்தாது உரிய நியதிப்படி நிகழ்த்தி வைப்பார்கள். அவர் பொருள் வருவாயைப் பொருட்படுத்துவதில்லை. அருள், அறிவு, ஒழுக்கம், உதாரணகுணம் முதலியன நிறையப் பெற்ற குருக்கள் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டினையும் இரு கண்ணெனப் போற்றுபவர். ஆகம மரபு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனைத் தமது இலட்சியமாகக் கொண்டவர். சிவப் பணிக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்ற சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வழிகளிலும் பரப்படைந்து செல்கின்றது. அதனைப் பாராட்டும் முகமாகவே ஆலய நிர்வாக சபையும், கனடா இந்து ஆலயங்களின் சங்கமும் இணைந்து இந்த வாழ்த்து மடலினை அவர்களின் சிறப்பான சேவையினை பாராட்டி வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது. சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் பக்தர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்குணமுடையவர்கள். ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தில் தங்களை முழுமையாக அர்பணித்து நேரம் தவறாது சிறப்பான முறையில் ஆகம விதிகளின் பிரகாரம் விஷேட அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளை நடத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது மூல மூர்த்திகளுக்கான சிறப்பான சாத்துப்படிகளை அமைத்து அழகுபடுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லையெனலாம். மேலாக ஆலயத்தில் நடைபெறும் சகல முக்கிய விழாக்கள் மற்றும் விஷேட பூஜைகளை முன்னின்று நடாத்தி ஆலயத்தின் பெரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். இன்றைய நாளில் அவர்களின் வேதாகம அறிவிற்கும், ஆன்மீகம் சம்பந்தமான சைவப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் அவர்களது பலவருட சேவையினை பாராட்டுவதுடன் “வேதாகம வித்தகர்” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம். உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர். கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு. கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். (கொடியேற்ற நாளில் சம்ஸ்தேவதா ஆவகனம் செய்து சகல தேவர்களையும் அழைப்பது போல கொடியிறக்கும் போது அவர்களை சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளச் செய்வதே சமஸ்த தேவதா விசர்ஜனமகும்). நிதானமாக கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியக் கோஷங்களுடன் இறக்கிக் கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும் கொடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து நீராஜனம் செய்வர். இதன் பின் உற்சவ மூர்த்தியை வீதிவலம் வரச் செய்வர். கொடியிறக்க நாளில் முதலில் வெளிவீதி வலம் வந்த பின்னரே உள்வீதி வலம் வருதல் முறை. வெளிவீதி வலம்வரும்போது நவசந்திகளிலும் முதலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர்களை மகிழ்வித்த பின் உத்வாகனம் செய்வர். இதன்பின் உள்வீதியில் வலம் வரும் போது: கிழக்கு கோபுர வாசலில் இருந்து தென்கிழக்கு வரை மங்கள வாத்தியமும்; அங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாராயணமும்; அங்கிருந்து தென்மேற்கு வரை தமிழ் வேதபாராயணமும்; அங்கிருந்து மேற்குத் திசைவரை சங்கு நாதமும்; அங்கிருந்து வடமேற்கு வரை தவில் தாள வாத்தியமும்; அங்கிருந்து வடக்கு வரை நாதஸ்வர கீத இசையும் இசைத்து; அங்கிருந்து வடகிழக்கு வரை மௌனமாகவும்; அங்கிருந்து வாயில்வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்ப்பர். சண்டேஸ்வர உற்சவம்: இதன்பின் பைரவர், சண்டேஸ்வரர் பூஜைகள் முடித்து சண்டேஸ்வரமூர்த்தியை வீதிவலம்வரச் செய்வர். சண்டேஸ்வரமூர்த்தி சிறிய விக்கிரகமாக அமைந்திருப்பதால் சிறுவர்கள் அதனைத் தூக்கிக்கொண்டு விளையாட்டாக ஓடிவருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. இது தவறான ஒன்றாகும். தலைசிறந்த பக்தராகவும், பக்தகோடிகளின் வழிபாட்டுப் பலனை அனுகிரகம் செய்பவராகவும் உள்ள சண்டேஸ்வரரைப் பணிவுடனும், பக்தியுடனும் கௌரவமாக வீதிவலம் வரச் செய்தல் அவசியமாகும். சண்டேஸ்வர உற்சவத்தின் பின் சிவாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷா பந்தனங்களையும் (காப்பு) அகற்றித் தமது கரத்திலுள்ள ரக்ஷா பந்தனத்தையும் நீக்குவார். ஆசார்ய உற்சவம்: மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக அமைவது ஆச்சாரிய உற்சவம். இறைவன்; குரு, லிங்கம், சங்கமம் என்ற மூன்று இடங்களில் நின்று அருள் செய்வதாகச் சாஸ்திரங்கள் பகரும். குரு கிரியைகளை நடத்தும் சிவாச்சாரியார், லிங்கம் என்பது பிம்பமாகிய திருவுருவமாகும். சங்கம் என்பது திருவடியார் கூட்டம். சங்கம வழிபாட்டை எடுத்துக் காட்டுவது மஹேசுர பூஜை (அன்னதானம்) ஆகும். மஹோற்சவம் நிறைவு பெற்று மறுநாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது மரபு. மஹோற்சவ காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துத் திருவருட் பேறினைத் தந்தருளும் குரு மூர்த்தியாகிய சிவாச்சாரியாரைப் பூமாலை முதலியவற்றல் அலங்கரித்து மங்கள வாத்திய சகிதம் வீதிவலமாக அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்து அடியார்கள் யாவரும் அவரை வணங்கி இயன்ற அளவு குருதட்சணை வழங்கி, விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு குருவின் அருளுரையை செவிமடுத்த பின் அவரை விடுதிவரை அழைத்துச் சென்று பின்னர் வீடு திரும்பினர். பார்ப்பதற்கு சகலது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
Langes, FCPA, FCGA
EasyNews EasyNews Latestnews
easy24news.com
Canada Hinu Temple Association

Previous Post

Langeswaran Tharmalingam is the only Tamil Canadian having the FCPA, FCGA & Ontario Distinguished Services prestigious awards in Canada!

Next Post

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு மிகவும் விமர்சையாக மண்டபம் நிறைந்த பக்தர்களுடன் கொடியிறக்கம் விழா இனிதே நடந்தேறியது.

Next Post
Easy24News

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு மிகவும் விமர்சையாக மண்டபம் நிறைந்த பக்தர்களுடன் கொடியிறக்கம் விழா இனிதே நடந்தேறியது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023

Recent News

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures