Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியவர் கைது

February 6, 2020
in News, Politics, World
0
5 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியவர் கைது

திருமலையில் பாரவூர்தியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு ; தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
திருகோணமலை-பாலம் போட்டாறு பகுதியில் பாரவூர்தியின் உதவியாளரை தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை மன்னாரில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவரது மனைவியான கௌரி மனோகரி (37 வயது) என்பவரையும் தம்பலகாமம் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி முதலாம் நாள் பொலன்நறுவை-ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து பாரவூர்தி ஒன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்ட நிலையில் பாரவூர்தியை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் அன்று அதிகாலை வீதியோரத்தில் பாரவூர்தி ஒன்றில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர பார்வையிட்டதையடுத்து சடலம் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து இறந்து கிடப்பவர் பாரவூர்தியின் சாரதியான திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் 47 வயதுடைய நபரின் சடலம் எனவும் தெரியவந்தது.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார் பாரவூர்தியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில் பாரவூர்தியில் பயணித்த சாரதி தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில் சாரதியின் வீட்டில் அவரது மரணம் தொடர்பில் மரண அறிவித்தல் பதாதைகள் போடப்பட்டிருந்த நிலையில் சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை பாரவூர்தியில் வைத்து தீ மூட்டி எரித்துவிட்டு ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார் தீ மூட்டி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் பாரவூர்தியில் பயணித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேகநபரான கந்தசாமி யோகநாதன் என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனாலும் அவருடன் உதவியாளராக பாரவூர்தியில் சென்ற 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவரது சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும் அவரது உடலின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் டிஎன்ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக இன்னும் இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர தெரிவித்தார்.

அத்துடன் தனது உதவியாளராக சென்ற நபரை எதற்காக தீ மூட்டினார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான 47 வயதுடைய கந்தசாமி யோகநாதன் என்பவரை மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Previous Post

திருகோணமலையில் விபத்து மூன்றுபேர் பலி

Next Post

ஜனாதிபதி செயலகம் முன் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

Next Post
ஜனாதிபதி செயலகம் முன் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி செயலகம் முன் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures