பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வைத்து குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மூன்று மனித கொலைகள் மற்றும் 15 பேரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவங்களுடன், விஷ போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

