தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். “அரச தலைவரின் செயற்பாடுகளில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. எமக்கு அரசின் செயல்களே அதிருப்தியளிக்கின்றன.
இரு கட்சிகளிலும் நல்ல பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். நாட்டு மக்களின் நன்மை கருதி அரசால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. அதில் எந்தவித தவறும் இல்லை.
2020ம் ஆண்டில் பிரதமர் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய ஒரு சிலர் கனவு காண்கின்றனர். – என்றார்
