2016ல் சர்வதேச தலைப்பு செய்திகளில் கனடா.

2016ல் சர்வதேச தலைப்பு செய்திகளில் கனடா.

2016ல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது செய்திகளை பகிர்ந்து கொள்வதில் கனடா நியாயமான பங்கு வகித்துள்ளதாக அறியப்படுகின்றது. மிகவும் கவனத்தை ஈர்க்கும் கனடிய கதைகளை சிரிவி தொகுத்துள்ளது.

head1

1-கனடா ஜெட் போர்விமானங்களை வாபஸ் பெற்றது:
அக்டோபர்; 2015 பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ சர்வதேச கவனத்தை ஈர்த்தார். தனது தேர்தல் வாக்குறுதியான ஐஎஸ்எஸ்சிற்கு எதிராக சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து கனடாவின் CF-18  போர் ஜெட் விமானங்களை யு.எஸ்.தலைமையிலான கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்க போவதாக திட்டமிட்டதை அறிவித்தார்.

head2
2- 25000 சிரிய அகதிகள் இலக்கை எய்தியமை.
பிப்ரவரி 27ல் 25,000சிரிய அகதிகள் மொன்றியலில் தரையிறங்கி லிபரல் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறிதியான எண்ணிக்கை இலக்கை எய்தியது.
இச்செய்தி ஐரோப்பா ஆசியா போன்ற கண்டங்களின் கவனத்தை ஈர்ந்தது.சர்வதேச அளவில் தலையங்கமாக பேசப்பட்டது.
சிரிய அகதிகள் முதலாவது விமானத்தில் ரொறொன்ரோ வந்திறங்கிய போது பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களை தனிப்பட்ட முறையிpல் வரவேற்ற காட்சிகள் உலகம் பூராகவும் வெளியிடப்பட்டது.

head3
3- ஒபாமா மற்றும் ட்ரூடோ உறவு:

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் யு.எஸ். வெள்ளை மாளிகைக்கு அதிபர் பராக் ஒபாமாவிடம் விஜயம் செய்தமை இரு தலைவர்களிற்குமிடையில் காணப்பட்ட பிணைப்பை உலகறிய செய்தது.

head4
4-றொப் வோர்ட்டின் மரணம்:

சர்வதேச தலையங்கங்கள் பேர்போன சர்ச்சைக்குரிய, சூறைக்காற்று மற்றும் பதற்றமான போன்ற உரிச்சொற்களை பயன்படுத்தின. கனடாவின் மிக பிரபலமற்ற அரசியல் வாதியின் மரணம் என உலகம் பூராகவும் உள்ள செய்தி நிறுவனங்கள் இவரது மரணத்தை அறிவித்தன.
தனது 42-வது வயதில் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

head5
5-வோர்ட் மக்முரே காட்டு தீ.
2016 இலை துளிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ 2400 வீடுகளை தீக்கிரையாக்கியதுடன் அல்பேர்ட்டா வரலாற்றில் மிகப்பெரிய வெளியேற்றத்தை தூண்டியதென பேசப்பட்டதுடன் சர்வதேச கவனத்தையும் ஈர்;த்த சம்பவமாகும்.
590.000 ஹெக்டர்களை அழித்த இக்காட்டு தீயை”The Beast,” என அழைக்கப்பட்டது. 3.58பில்லியன் டொலர்களிற்கும் மேலான சேதம் ஏற்பட்டது.

head6
6- நீர் அருகே வாழும் பெரிய கொறிக்கும் உயிரினம் great capybara தப்பி ஓடியது.

கடந்த மே மாதம் ஹைபார்க் மிருககாட்சி சாலையில் இருந்து இந்த உயிரினம் காணாமல் போனது.
இவைகளை தேடும் முயற்சிகளின் முன்னேற்றத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தி மையங்கள் மிக உன்னிப்பாக அவதானித்தன.யூன் மாதம் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

head7
7-ட்ரூடோ ரொறொன்ரோPride paradeல் கலந்து கொண்டமை:

2016ல் யூலையிpல் இடம்பெற்ற ரொறொன்ரோவின் வருடாந்த Pride parade ல் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தார். அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முதலாவது பிரதம மந்திரி என்ற இடத்தை பெற்றார்.
அணிவகுப்பில் கலந்து கொண்ட டுபுடீவு அங்கத்தவர்களுடன் சேர்ந்து நடந்து ஆடி பாடி மகிழ்ந்தார்.

head8

8-அரச குடும்பத்தின் கனடா விஜயம்.

செப்ரம்பர் மாதம் டியுக் மற்றும் டச்சர்ஸ் கேம்பிரிட்ஜின் கனடிய விஜயத்தை மலேசிய போர்னியோ போஸ்ட் முதல் யு.எஸ்.மில்வாக்கி ஜெர்னல் சென்ரினல் வரை உலகம் பூராகவும் உள்ள செய்தி அமைப்புக்கள் பொழுது போக்கு வெளியீடுகள் மற்றும் கிசுகிசுப்புக்கள் அனைத்தும் மிக உன்னிப்பாக அரச குடும்பத்தினரின் கனடா விஜயத்தை மிக நெருக்கமாக தொடர்ந்து கவனித்து வந்தனர்.

head9

9-கனடா CETA யில் கைச்சாத்திட்டமை.

அக்டோபர் 30 பிரதம மந்திரி ஜஸ்ரி ட்ரூடோ பெல்ஜியம் ,பிரசெல்சிற்கு கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் (CETA) ஒன்றை கைச்சாத்திட ஒரு கடைசி நிமிட விஜயத்தை மேற்கொண்டார்.
அனேகமான ஐரோப்பிய செய்தி அமைப்புக்கள் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்த பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் வெளியிட்டன.

head10

10-கனடிய குடிவரவின் இணையத்தளம் திணறடிக்கப்பட்டது.

நவம்பர் 8ல் யு.எஸ் அதிபர் தேர்தல் ஆரம்பமாகி டொனால்ட் டிரம் வெற்றியடைந்ததை தொடரந்து கனடிய குடிவரவின் இணையத்தளம் பாரிய எதிர்பாராத நடவடிக்கைகளை எதிர்நோக்கியது.
பாவனையாளர்கள் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. 200,000ற்கும் மேற்பட்ட வருகையாளர்கள்-கிட்டத்தட்ட 50சதவிகிதமான அமெரிக்கர்கள் தளத்தை உபயோகித்தமை தெரிய வந்தது.
ஆற்றொணா அமெரிக்கர்கள் கனடிய குடிவரவு இணையத்தளத்தை அணுகியமை குறித்து யு.எஸ். யப்பான் மற்றும் ஐரோப்பிய தலையங்கங்கள் வெளிவரத்தொடங்கின.
இவ்வாறாக பலவழிகளில் கனடா உலகின் கவனத்தை பிடித்து கொண்டது.
புதிய தலைவர் தலைமை பொறுப்பை கொண்டிருப்பதால் நாட்டை ஒரு புதிய திசையில் முன்மொழிவதற்கு இயங்கலாம்.
2016; கனடாவிற்கு மிக சுவாரஸ்யமான ஆண்டாக இருந்தது.

– See more at: http://www.canadamirror.com/canada/77306.html#sthash.kTcdsjcP.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News