Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

April 12, 2022
in News, Sri Lanka News
0
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் தற்போது 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக கொவிட் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ‘கொவிட் இட்டுகம’ நிதியத்தின் நிதியை உபயோகிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மத்திய வங்கி ஆளுனரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் நிதியத்தின் நிதியை கையாளும் அதிகாரம் மத்திய வங்கி ஆளுனருக்கே காணப்படுகிறது என்ற அடிப்படையிலே, அவரிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு குறித்து நாம் ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தோம்.

இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு உதவுமாறு வெளிநாட்டவர்களிடமும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும் இதனைக் கருத்திற் கொண்டு இணைப்பு அதிகாரியொருவரை நியமித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றை முறையாகப் பேணுவதற்காக வெளிப்படையான பொறிமுறையொன்றை அமைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் தொற்றின் போது ஸ்தாபிக்கப்பட்ட ‘இட்டுகம’ நிதியத்தின் மூலம் சுமார் 2 பில்லியனுக்கும் அதிக நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இதனைக் கையாளும் அதிகாரம் மத்திய வங்கி ஆளுனருக்கே உரித்தாகவுள்ளது.

எனவே இந்த நிதியத்திலுள்ள நிதியை தற்போது தோற்றம் பெற்றுள்ள சுகாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக உபயோகிக்குமாறு மத்திய வங்கி ஆளுனரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்து , அவற்றினுடைய பிரச்சினையைத் தீர்க்குமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம்.

அத்தியாவசிய மருந்துகள் மாத்திரமின்றி சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும் கூறுகள் , மருத்து உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது 200 க்கும் அதிக மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 20 க்கும் அதிகமாக மருத்துவ கூறுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

Previous Post

காலி முகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்?

Next Post

பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுமா?

Next Post
பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

June 10, 2026
விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

June 10, 2026
பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

June 9, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures