Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

1983 கறுப்பு யூலை நினைவேந்தலும் ஈழத்தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கையும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

July 24, 2016
in News, Politics
0

1983 கறுப்பு யூலை நினைவேந்தலும் ஈழத்தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கையும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும்தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரவித்துள்ளார்.

1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த்தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் விஉருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின்முழுவடிவம் :

1983 யூலை – தமிழர்கள் மீது சிங்களத்தின் இராணுவ ஒடுக்குமுறை நிறுவனமயமாக்கப்பட்டதன் பிறப்பு.1983 யூலையில் நிகழ்ந்த தமிழர் விரோதக் கொலைவெறியாட்டத்தில் பத்து நாளில்2,000 – 3,000 தமிழர்கள் உயிரிழந்தார்கள், ஒன்றரை லட்சம் மக்கள் வீடுவாசல்இழந்து இடம்பெயர நேரிட்டது.

தமிழர்களின் தொழில் கட்டமைப்பில் 90 விழுக்காடு அழிந்து போயிற்று. இந்தநரவேட்டை அரசின் இசைவுடன், அரசினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.அதிபர் ஜெயவர்த்தனா அதனைக் கண்டிக்கவே இல்லை.

தமிழர்-விரோதக் கும்பல் வன்முறை ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிறில்மத்யூ, காமினி திசநாயகா ஆகியோரின் நெறிப்படுத்தலுடனும் அரவணைப்புடனும்நடைபெற்றது.

பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையம் உண்மையறியும் பணிக்காக அதன் பிரித்தானியப்பிரிவின் தலைவர் பால் சீகார்ட் அவர்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்தது.

1983யூலையில் நிகழ்ந்த தமிழர்-விரோத வன்முறை என்பது ‘மிகவும் முன்கூட்டியேவகுத்தும் தொகுத்தும் திட்டமிட்டபடி அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட செயல்களே’என்று அவர் எழுதினார்.

பன்னாட்டுச் சட்டவாளர் ஆணைய வெளியீடாகிய த ரிவ்யூ இந்த வன்முறை ‘இனக் கொலைச்செயல்களுக்கு ஒப்பானது’ என்று அறிவித்தது.

1956 ஜூன் 5ம் நாள் குழந்தைகள் உள்ளிட்ட 146 தமிழ் உழவர்கள் கல் ஓயாவில்படுகொலை செய்யப்பட்டதிலிருந்தே பெருந்தொகையான தமிழர்கள் மீது கும்பல் வன்முறைஎன்பது வாடிக்கையாகி விட்டது.

தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் தமிழ்த் தலைமை அமைதி வழியில் முன்னெடுத்த அறப் போராட்டம் நடந்துகொண்டிருந்த போதுதான், அந்தப் போராட்டத்தின் விளைவாகவே, இந்தப் படுகொலைநிகழ்ந்தது.

கல் ஓயாவில் படுகொலை நிகழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அது தொடர்பாகஒரே ஒருவர் கூட நீதியின் முன் நிறுத்தப்படவே இல்லை.

தமிழர்களின் அறப் போராட்டத்துக்கும் அதனைப் படைகொண்டு ஒடுக்கும்அடக்குமுறைக்குமான தொடர்பை அதிரடியாக வெளிப்படுத்தும் வகையில், 1960அறப்போராட்டம் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் நிரந்தர இராணுவப் பாசறைநிறுவப்பட்டது.

யூலைப் படுகொலை குறித்து எழுந்த கூக்குரலால் 1983 ஆகஸ்டில் ஐநா துணைஆணையத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுவர் இவ்வாறு உறுதியளித்தார்:

கொலைகளுக்கும் வன்முறைக்கும் அழிவு வேலைகளுக்கும் காரணமானவர்களின் தகுநிலை,கருத்தியல் அல்லது அரசியல் சார்புகள் என்னவாயினும், அவர்களனைவரையும் நீதியின்முன் நிறுத்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் இயன்றதனைத்தும் செய்வார்கள். இதில்எவருக்கும் விலக்களிக்கப்படாது.’

அரசைச் சேர்ந்தவர்களாலேயே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட இந்தத் தமிழர்-விரோதப்பெருங்கொலைகளுக்காக இது வரை புலனாய்வோ வழக்குத் தொடுப்போ எதுவும் இல்லை.

இந்த நரவேட்டையின் போது அதிபர் ஜெயவர்த்தனா வன்முறையைக் கட்டுப்படுத்த எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமன்று, யூலை 26ஆம் நாள் லண்டன்’டெய்லி டெலிகிராப்’ ஏட்டில் சொன்னார்:

யாழ்ப்பாணத்து மக்கள் என்னகருதுகிறார்கள் என்ற கவலை எனக்கில்லை… அவர்களைப் பற்றி, அவர்களது வாழ்க்கை,அவர்களது எண்ணம் பற்றியெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்க முடியாது.

வடக்கில் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, இங்கே சிங்கள மக்கள் அந்தஅளவுக்கு மகிழ்வார்கள்…. நான் தமிழர்களைப் பட்டினி போட்டு விரட்டியடித்தால்,சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்பதுதான் உண்மை.’

அதிபர் ஜெயவர்த்தனா உள்ளூர் ஏடுகளிலும் இப்படித்தான் கூறினார் என்பதில்ஐயமில்லை. அவரது கூற்று ‘தமிழர்களைக் கொல்வதற்கு உரிமம்’ கொடுத்தாற்போலாகிவிட்டது.

இதுவே நாட்டு அதிபரின் பார்வையில் தமிழர்கள் வேறொரு தனித் தேசம்ஆவார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அமைந்தது.தமிழ், சிங்கள ‘மக்களினங்கள்’ இடையிலான வேறுபாட்டுக் குறிப்போடு தமிழ்த் தேசத்தகுதியைச் சுற்றிவளைத்துச் செல்லுபடியாக்கியது.

1983 தமிழர்-விரோத வெறியாட்டம்இந்தியா விடுத்த கடும் எச்சரிக்கையின் ஊடாகவே நிறுத்தப்பட்டது.யூலைப் படுகொலையைத் தொடர்ந்தே ஆட்சியாளர்கள் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம்நிறுவி, சிறப்பு அதிரடிப் படை அமைத்ததின் ஊடாகத் தமிழர்களைக் குறிவைத்துஇராணுவ, உளவு நடவடிக்கைகளை நிறுவனமயமாக்கினார்கள்.

2009 குளிர் காலத்திலும் இளவேனிற்காலத்திலும் முள்ளிவாய்க்காலிலும் அதையொட்டியபகுதிகளிலும் நிகழ்ந்த தமிழர் விரோத இனவழிப்புச் செயல் – 1,46,000மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அந்த இனவழிப்புச் செயல் – 1983க்குப்பின்நிறுவனமயமாக்கப்பட்ட சிங்கள இராணுவம், இராணுவ உளவுத் துறை ஆகியவற்றின்நடவடிக்கைகளது உச்ச விளைவுதானே தவிர வேறன்று.

மனித உரிமைகளுக்கான தமிழ் மையம் 1956 முதல் 2007 முடிய பாதுகாப்புப் படையினர்பதினாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளது.

போர் முடிந்ததிலிருந்து, 2015 செப்டெம்பர் ஐநா மனித உரிமை மன்றத்தீர்மானத்துக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் கூட, தமிழ்ப் பகுதிகள் மீதானஇராணுவ ஒடுக்குமுறை தொடர்ந்துள்ளது.

குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு வழிசெய்யும்படியான பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தமும் சட்ட நிறுவனச் சீர்திருத்தமும் செய்ய வேண்டும் என்பதுஇந்தத் தீர்மானத்தின் குறிப்பான கோரிக்கையாகும்.

இது மாற்றநோக்கு நீதியின் இன்றியமையா அடிக்கூறுகளில் ஒன்று. பாதுகாப்புஅமைச்சகத்தின் வலைத்தளத்தில் கண்டுள்ளபடி, நாட்டின் 20 படைப்பிரிவுகளில் 17பிரிவுகள் மரபுவழித் தமிழ்ப் பகுதியான வடக்குகிழக்கில் நிற்கின்றன.

வடக்கில்பெரும்பகுதியில் 5 தமிழ்க் குடிமக்களுக்கு ஒருவர் வீதம் சிங்களப் படையாள்நிற்கிறார்.பிரித்தானியத் தமிழர் பேரவை தரும் கணக்குப்படி, வடக்கில் 68,000 ஏக்கர்தமிழருக்குச் சொந்தமான நிலம் இன்னும் இராணுவத்தின் பிடியில் உள்ளது.

வெளி அச்சுறுத்தல் ஏதும் இல்லாத இன்றைய நிலையில் படைநீக்கம் செய்வதற்குப்பதிலாக, உள்ளபடி நடப்பது என்னவென்றால் இராணுவத்தின் ஆள்வலு, செலவுத் திட்டம்இரண்டையும் அதிகமாக்கியுள்ளனர்.

இராணுவமும் அதன் உளவுப் பிரிவும் தமிழர் வாழ்விலும் நல்லதுகெட்டது அனைத்திலும்நீக்கமற மூக்கு நுழைக்கும் நிலை உள்ளது.

இராணுவம் வணிகம் செய்கிறது, வேளாண்விளைபொருள் விற்பனை செய்கிறது, பயணியர் விடுதிகள் நடத்துகிறது,பள்ளிமுன்பருவக் கல்வி புகட்டுகிறது, வெகுநெருக்கமான குடும்பச் சடங்குகளில்கூட வந்து நிற்பேன் என்று வலியுறுத்துகிறது.

1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும் தமிழ்த் தேசியஇனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

சிங்கள மேலாதிக்கம்மிக்க தேசிய மன நிலைக்குள் ஆழப் பதிந்துள்ளன.தமிழர் தாயகத்தின் படைநீக்கம் பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச்சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும்.

கறுப்பு யூலையை நினைவு கூரும் இந் நாளில் ஈழத் தமிழ் மக்களின்சுதந்திரத்திற்கும், நீதிக்கும், சமாதானத்திற்குமான கோரிக்கைக்கு ஆதரவுவழங்குமாறு சர்வதேச சமுதாயத்தை ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர். இவ்வாறுபிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags: Featured
Previous Post

புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்!

Next Post

பேரன் கொலையின் குற்றவாளிகள் யார்?: பொலிஸார் தகவல்

Next Post
பேரன் கொலையின் குற்றவாளிகள் யார்?: பொலிஸார் தகவல்

பேரன் கொலையின் குற்றவாளிகள் யார்?: பொலிஸார் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures