18-வயது பாடசாலை மாணவன் கத்தியால் குத்தப்பட்டான்.

18-வயது பாடசாலை மாணவன் கத்தியால் குத்தப்பட்டான்.

stab-600x338stab2-600x338

stab3-600x400கனடா-ஸ்காபுரோவில் உள்ள மாற்றீட்டு பாடசாலை ஒன்றின் 18-வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான்.இச்சம்பவம் வியாழக்கிழமை காலை நடந்தது.
ஸ்காபுரோவில் மிட்லன்ட மற்றும் வொல்வி அவெனியுவில் அமைந்துள்ள மாற்றீட்டு பாடசாலைக்கு வெளியே காலை 11-மணியளவில் நடந்துள்ளது.
இது சம்பந்தமாக 18முதல் 20வயதிற்குட்பட்ட கறுப்பு மனிதன் ஒருவரை பொலிசார் சந்தேகத்தின் பெயரில் தேடிவருகின்றனர்.இந்நபர் சிவப்பு நிற hoody மற்றும் கடும்நிற காற்சட்டை அணிந்திருந்ததோடு கிரே-கறுப்பு நிற தோள் பையும் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து மாற்றீட்டு பாடசாலை மற்றும் மிட்லனட் அவெனியு கல்லூரி நிறுவனம் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகள் கட்டுப்பாட்டின்கீழ் மூடப்பட்டன.
கடந்த சில மாதங்களில் குறிப்பிட்ட பாடசாலை பகுதியில் மற்றும் இரண்டு குத்து சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் ஒன்ராறியோ மேல்நிலைப்பள்ளி டிப்ளோமா பெற்றவர் எனவும் ஆனால் கல்லூரி செல்வதற்காக தனது புள்ளிகளை மேம்படுத்த மீண்டும் வகுப்புகளிற்கு வந்தார் எனவும் கூறப்படுகின்றது.
இவர் ஒரு சிறந்த இளம் வாலிபன் என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News