Easy 24 News

“நான் இதற்கு மிகவும் வயதானவள்”. 50மில்லியன் ஜக்பொட் வெற்றி பெற்ற 80-வயது மூதாட்டி?

“நான் இதற்கு மிகவும் வயதானவள்”. 50மில்லியன் ஜக்பொட் வெற்றி பெற்ற 80-வயது மூதாட்டி?

கனடா-அல்பேர்ட்டாவை சேர்ந்த 80-வயதுடைய பெரிய-பாட்டி ஒருவர் லாட்டரி ஜக்பொட்டில் 50மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
நவம்பர் 12ந்திகதி லாட்டரி சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற இவருக்கு தான் வெற்றி பெற்றதை நம்ப முடியவில்லை.
லூயிஸ் ஒல்சன் என்ற இவர் அல்பேர்ட்டாவில் இர்மா என்ற ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்.
புதன்கிழமை தனது பரிசு தொகையை பெற்று கொண்டார்.
தனது பரிசு பணம் தன் குடும்பத்தினருக்கு உதவும் என தெரிவித்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள், ஒன்பது பேரப்பிள்ளைகள் மற்றும் எட்டு பூட்டப்பிள்ளைகள்.
தனது குடும்பம் அனைத்திற்கும் உதவி செய்வார் என தெரிவித்துள்ளார். இத்தொகைக்கு தான் வயதானவள் என கூறுகின்றார். 20அல்லது 30வருடங்களிற்கு முன்னர் கிடைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றார்.
உடனடி திட்டங்கள் என்ன என கேட்டபோது தனது 11வருடங்கள் பழைய காரை மாற்றி ஒரு SUV வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்தார். இதுவே தனது பெரிய கொள்முதலாகும் என கூறினார்.
பயணங்களை மேற்கொள்ள விரும்புகின்றார். தான் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என புன்னகையுடன் தெரிவித்தார்.
இது வரை இவரது வாழ்க்கையின் பெரும்பகுதியை குடும்ப பண்ணையில் பணிபுரிவதில் செலவழித்துள்ளார்.
பால் பண்ணையில் பால் கறக்கும் இயந்திரத்தை வாங்க முன்னர் கையை உபயோகித்ததை நினைவு கூர்ந்தார்.
தனது புதிய அதிஷ்டத்துடன் இர்மா கிராமத்தை விட்டு வெளியேறும் எண்ணம் இவருக்கு இல்லை.
பணம் எனக்கு ஒரு பெரிய அர்த்தமாக தெரியவில்லை.நான் கஸ்டமான தருணங்களை சந்தித்துள்ளேன் என கூறுகின்றார்.

oldold1old2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *